11.12.12

PHYSICS MODEL QUESTION TERM 2

தேர்வு எழுத ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் இயற்பியல் தேர்வில் அதிக ஸ்கோர் பெறும் பொருட்டு இந்த வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி அதிக ஸ்கோர் பெற வாழ்த்துக்கள்.

ஸ்கோர்: 40
நேரம் : 1 ½ மணி
இயற்பியல் மாதிரி வினாக்கள்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி


-->
1. சரியான முறையில் பொருத்துக:                                                                       1
     அதிர்வெண் : ஹெர்ட்ஸ்
     ஒலித்தீவிரம் : ….............
2. தொடர்பினைக் கண்டறிந்து முழுமையாக்கு:                                                      1
வானவில் : ஒளிப்பிரிகை
வானத்தின் நீலநிறம் : …..................
3. கீழே தரப்பட்டுள்ளதிலிருந்து சரியான கூற்றுகளை எழுதுக.                                 1
a) அசையும் சுருள் மைக்ரோபோண் மின்னாற்றலை ஒலி ஆற்றலாக மாற்றுகிறது.
b) அசையும் சுருள் மைக்ரோபோண் மின்காந்த தூண்டல் தத்துவத்தில் வேலை செய்கிறது.
c) அசையும் சுருள் மைக்ரோபோண் ஒலியாற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது.
d) அசையும் சுருள் மைக்ரோபோண் மோட்டாரின் தத்துவத்தில் வேலை செய்கிறது.
4. மின்னணு கருவிகளோடு தொடர்புடைய இரண்டு அளவுகள் தரப்பட்டுள்ளது. அந்த
கருவிகள் எவை என எழுதுக.                                                                             2
a) 100mF
b) 100mH
-->
5. படத்தை உற்றுநோக்கவும் :-

-->
a) படத்திலுள்ள கருவியின் பெயர் என்ன?                                                     1
b) இக்கருவி வேலை செய்யும் தத்துவத்தை எழுது.                                           1
c) துணைச்சுருளிலுள்ள சுற்றுகளின் எண்ணிக்கை எத்தனை?                              1
 
6. படத்தை உற்றுநோக்கவும் :-
-->
a) மூன்று ஊசி ப்ளக்கின் நீளம் கூடிய (A) ஊசியின் பெயரென்ன?                   1
b) இது மின்கருவிகளைப் பாதுகாப்பது எவ்வாறு?                                           2
7.
-->
-->
a) படத்தில் உள்ளது போன்று மின்னாற்றலை தோற்றுவிக்கும் கருவி எது?         1
b) இந்த மின்னாற்றலின் தனித்தன்மைகள் என்ன?                                           2
c) இந்த கருவியில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு பகுதிகள் எவை?            1
d) இந்த கருவியின் குறியீடினை வரைக.                                                        1
-->
8. கீழே தரப்பட்டுள்ளவையை அகச்சிவப்பு புறஊதா இவற்றிற்குப் பொருத்தமானதாக
அட்டவணைப்படுத்து.                                                                                 2
a) பார்வை ஒளிடைவிட அலைநீளம் அதிகம்.
b) போட்டோகிராபிக் தகடில் வேதிமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
c) தொலை தூரத்திலுள்ள பொருட்களின் படம் எடுக்க பயன்படுத்தப்படுகிறது.
d) தோலிற்கு நிறமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
-->
9. ஒளி இல்லாத அறையில் நீலநிற கண்ணாடியில் வெள்ளொளி விழச்செய்யப்படுகிறது.
எதிரொளித்து வரும் ஒளி வெள்ளை நிற சுவரில் பதிக்கப்படுகிறது.
a) சுவரில் தோன்றும் நிறம் எது?                                                                   1
b) வெள்ளொளிக்குப் பதிலாக நீலநிறத்தை விழச்செய்தால் சுவரில் கிடைக்கும்
நிறம் எது?                                                                                                  1
10. 
-->
a) படத்திலுள்ள மின்சுற்று மின்மாற்றியின் எந்த பகுதியில் காணப்படும்?          1
b) இந்த மின்சுற்றின் பெயரென்ன?                                                               1
c) B, C என்பவற்றிற்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு என்ன?            1
d) E என்ற புள்ளியின் தனித்தன்மை என்ன?                                                  1
11.  
-->
a) P யை அதிர்வடையச் செய்தால் என்ன நிகழும்?                                      1
b) P அதிர்வடையும்போது உயர்ந்த அதிர்வெண்ணில் அதிர்வடைவது எது?   1
c) இந்த நிகழ்வின் பெயரென்ன?                                                               1
d) இந்த நிகழ்வு ஏற்படும் வேறொரு சூழ்நிலையை எழுதுக?                         1
12. 
-->
a) A, B என்ற வரைபடங்கள் குறிப்பிடும் வண்ணக் கதிர்களில் ஒரு முப்பட்டகத்தின்
பாதத்திற்கு அருகே விழும் கதிர் எது?                                                          1
b) இதில் எந்த கதிர் அதிகமாக விலகல் அடையும்?                                       1
c) இதற்கான காரணம் என்ன?                                                                    1
13.
-->
a) படத்தில் L எதனைக் குறிப்பிடுகிறது?                                                     1
b) L னை மின்சுற்றிலிருந்து அகற்றினால் பல்பின் ஒளித்தீவிரத்தில் தோன்றும்
மாறுதல் என்ன?                                                                                        1
c) இதற்குக் காரணமான நிகழ்வு என்ன?                                                      1
14.
-->
a) இந்த இசைக்கவையிலுள்ள எண்கள் எதைக் குறிப்பிடுகின்றன?                 1
b) எந்த இசைக்கவையிலிருந்து தோன்றும் சுருதி அதிகம்?                             1
C) ட்ரபிள் என்பதின் பொருள் என்ன?                                                        1
15. 30 Hz அதிரவெண்கொண்ட கால்டன் விசில் பயன்படுத்தி நாய்கள் அழைக்கப்படு
கிறது.
a) இந்த ஒலி எந்த வகையைச் சார்ந்தது?                                                      1
b) இத்தகைய ஒலிகளின் இரண்டு பயன்களை எழுதுக?                                 2
           

  







No comments:

Post a Comment