KEEP IT IN YOUR MEMORY



அக்டோபர் 1

சர்வதேச முதியோர் தினம்

தேசிய ரத்த தான தினம்

1958 NASA நிறுவப்பட்டது.

1869 உலகின் முதல் POST CARD - யை ஆஸ்திரேலியா வெளியிட்டது.

1880 உலகின் முதல் மின்விளக்கு தொழிற்சாலையை தாமஸ் ஆல்வா எடிசன் நிறுவினார்.

அக்டோபர் 2

மகாத்மாகாந்தி பிறந்த தினம்.(1863-1948)

லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்.(1904-1966)

காமராஜர் நினைவு தினம்.(1903-1975)

அக்டோபர் 3

1990 கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இணைந்த நாள்.

அக்டோபர் 4

சர்வதேச விண்வெளி வாரம்.

சுப்ரமண்ய சிவா பிறந்த தினம்.

அக்டோபர் 5

சர்வதேச ஆசிரியர் தினம்


அக்டோபர் 7

1950 அன்னை தெரசா மிஷனரீஸ் ஆப் சாரிட்டி துவங்கிய தினம்


அக்டோபர் 8

இந்திய விமானப்படை தினம்


அக்டோபர் 9

உலக தபால் தினம்


அக்டோபர் 10

தேசிய அஞ்சல் தினம்

சர்வதேச மனநல நாள்


அக்டோபர் 11

ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த தினம் (1902-1979)


அக்டோபர் 12

கொலம்பஸ் அமெரிக்காவில் கால்பதித்த தினம்


அக்டோபர் 13

கிரீன்விச் நேரம் அமல் செய்யப்பட்டது


அக்டோபர் 14

சர்வதேச தர நிர்ணய தினம்


அக்டோபர் 16

உலக உணவு தினம்


அக்டோபர் 18

தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் (1847-1931)


டிசம்பர் 1

உலக எய்ட்ஸ் தினம்


டிசம்பர் 2

அடிமைத்தன ஒழிப்பு தினம்


டிசம்பர் 3

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

1984 போபால் விஷவாயு கசிவு.


டிசம்பர் 4

இந்திய கடற்படை தினம்.

1924 Gate way of India திறப்பு


டிசம்பர் 5

அரவிந்தர் நினைவு தினம்.


டிசம்பர் 6

அம்பேத்கர் நினைவு தினம்.


டிசம்பர் 7 சர்வதேச விமான போக்குவரத்து தினம்
இராணுவ கொடிநாள்

டிசம்பர் 8
1937 மும்பையில் முதல் இரண்டு அடுக்கு கொண்ட பஸ் அறிமுகம்.

டிசம்பர் 9
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

டிசம்பர் 10
ராஜாஜி பிறந்த நாள்
மனித உரிமை தினம்

டிசம்பர் 11
பாரதியார் பிறந்த தினம்

டிசம்பர் 12
1971 மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டது

டிசம்பர் 13
1904 லண்டனில் முதல் மின்சார ரயில் இயக்கபட்ட நாள்.

டிசம்பர் 14
நாஸ்ட்ரடாமஸ் பிறந்த தினம்.

டிசம்பர் 15
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்

டிசம்பர் 16
1971 பாகிஸ்தான் படைகள் வங்கதேசத்தில் தோற்கடிக்கப்பட்ட நாள்.

டிசம்பர் 17
1903 முதல் ஆகாயவிமானம் பறந்த நாள்

டிசம்பர் 18
சர்வதேச இடம் பெயர்வோர் தினம்

டிசம்பர் 22
கணிதமேதை ராமானுஜம் பிறந்த தினம்.
குரு கோவிந்த சிங் பிறந்த தினம்

டிசம்பர் 23
விவசாயிகள் தினம்

டிசம்பர் 24
எம்.ஜி.ஆர் நினைவு தினம்
ஈ.வே.ராமசாமி நினைவு தினம்

டிசம்பர் 25
ராஜாஜி நினைவு தினம்.
வாஜ்பாய் பிறந்த தினம்.

டிசம்பர் 27
1911 தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது.
டிசம்பர் 30
ரமண மகரிஷி பிறந்த தினம்.



தெரிந்துகொள்வோம்





1.VERY LARGE TELESCOPE (VLT)

பூமியில் நிறுவப்பட்டுள்ளதில் மிகப்பெரிய தொலைநோக்கி. பெரியது மட்டுமல்ல மிக நுண்ணிய தொழில்நுட்பம் கொண்டதும் ஆகும். 8.2 மீட்டர் விட்டம் கொண்ட நான்கு சிறிய தொலைநோக்கிகளையும் கொண்ட இணைப்பாகும். இவை அனைத்தையும் சேர்த்து Very Large Telescope Interferometer என அழைக்கிறார்கள். பூமியில் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்றான சிலியிலுள்ள அட்டகாமா பாலைவனத்திலுள்ள Paranal Observatory – யில் நிறுவப்பட்டுள்ளது.


2.புளூடூத் (Bluetooth)

எரிக்சன் நிறுவனம் 1994 –ல் உருவாக்கிய தொழில்நுட்பம். Frequency Hoping Spread Spectrum என்ற தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2ஜி மொபைல் போண்களின் வாயிலாக இது பிரபலமானது. குறிப்பிட்ட தொலைவிற்குள் தரவுகளையும் (data), படங்களையும் ரேடியோ அலை (Radio Waves) களை கம்பியில்லாமல் பரிமாறிக்கொள்ளும் தொழில்நுட்பம்.

3. புதுமை)

21-ம் நூற்றாண்டின் முதல் புதுமையாக, ஐஸ்லாந்து நாட்டின் அரசியல் சாசனம், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

4. பின்கோடு (அஞ்சலக எண்)

6 2 8 001 இதில் 001 அஞ்சலகத்தைக் குறிக்கிறது, 8 மாவட்டத்தைக் குறிக்கிறது, 2 சப்-ரீஜியனைக் குறிக்கிறது, 6 ரீஜியனைக் குறிக்கிறது.

5. மனநலம்

எதற்கெடுத்தாலும் மனதை அதிகம் அலட்டிக் கொள்வதே மன அழுத்தத்திற்கு காரணம் என்கிறது ஆயுர்வேதம். அடைய விரும்பும் லட்சியத்தை எட்ட முடியாமல் போதல். பதற்றமாக செயல்படுதல், உணர்ச்சி வசப்பட்டு பேசுதல் போன்றவை மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் மன நலம் மட்டுமல்லாது உடல்நலமும் பாதிப்பிற்குள்ளாகிறது..

6. நோபல் பரிசு

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை தலா ரூ. 7.25 கோடி...

7. நோபல் பரிசு

2011-ம் ஆண்டு நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெய்ன்மன் அந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டார். பொதுவாக மரணத்துக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. ஆனாலும் பரிசுக்குத் தேர்வு செய்யும்போது ஸ்டெய்ன்மன் இறந்த விவரம் நோபல் கமிட்டிக்குத் தெரியாது என்பதால் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.










உங்கள் சிந்தனைக்கு

1. முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் சிறைபிடிக்கும், எழுந்து நட எரிமலையும் வழி கொடுக்கும்.


2. எத்தனை துன்பங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், எனக்கு கவலை இல்லை, ஏனென்றால் நான் நூறுமுறை ஜெயித்தவன் அல்ல. ஆயிரம் முறை தோற்றவன் – தாமஸ் ஆல்வா எடிசன்.


3. தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது.


4. மரியாதை பெறும் ஒரே வழி அதனை முதலில் கொடுப்பதாகும்.


5. காலக் கடலில் பயணம் செய்யும் நமக்கு கலங்கரை விளக்கு
நல்ல புத்தகங்களே!.


6. நான் அறிந்து கொள்ள வேண்டியவற்றைத் தருபவை புத்தகங்களே! இதுவரை நான் படித்திராத புத்தகத்தைத் தருபவனே நல்ல நண்பன். - ஆபிரகாம் லிங்கன்.


7.சாதாரண மனிதன் கூட தன்னுடைய சக்தியினை ஒருமுகப்படுத்தி முயற்சிப்பதன் மூலம் சாதனை பெறமுடியும். அதே நேரம் - வலிமை மிக்கவனாயிருந் தாலும் தனது சக்தியினைச் சிதறடித்தால் நிச்சயம் வெற்றிபெற முடியாது.


8.சுறுசுறுப்புடன் வேலை செய்து வரும் தேனீக்களுக்கு அழுவதற்கு நேரமில்லை - நன்னெறி.


9.நீ வாயைத் திறக்கும் போதெல்லாம் உன் உள்ளத்தைத் திறக்கிறாய். அதனால் கவனமாக இரு.


10.தவறை ஒப்பு கொண்டு அதனைத் திருத்திக்கொள்பவன் வெற்றி பெறுவது நிச்சயம்.


11.மாமரத்தின் பூக்கள் அனைத்தும் பழமாவதில்லை. வாழ்க்கை என்ற மரத்தில் பூக்கும் பூக்களும் அதே போன்று தான் - காண்டேகர்


12.தீய மனிதர்கள் பயத்துக்கும், நல்ல மனிதர்கள் அன்பிற்கும் அடிபணிகிறார்கள் - அரிஸ்டாட்டில்


13.பண்புடையவர்கள் தன்னைத்தானே பாராட்டி கொள்வதில்லை- லுடும்பா


14.கோபம் வாயை திறக்க வைக்கும் ஆனால் கண்களை மூடிவிடும் - கேட்டோ


15.ஒழுக்கம் பிச்சைக்கார வடிவத்தில் இருந்தாலும் மதிக்கப்படும் - நன்னெறி.



No comments:

Post a Comment