5.6.12

சுக்கிரனின் வெள்ளிக் கடவு (transit of venus)

வெள்ளி கிரகம் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் அல்லது சூரிய உதயத்திற்க்கு முன்னர் கிழக்கு வானில்  ஜொலிக்கும் வெள்ளி கிரகத்தைக் காணாதவர்கள் இருக்க முடியாது.



மேற்கு வானில் சந்திரன் அருகே ஒளிப்புள்ளியாகத் தெரிவதே வெள்ளி கிரகம்.
ஆனால் ஜூன் 6 ஆம் தேதி காலையில் சூரியனின் ஒளித் தட்டில் வெள்ளி கிரகத்தை நீங்கள் கருப்புப் பொட்டு வடிவில் காணலாம்.


சுக்கிரனின் வெள்ளிக் கடவு பார்ப்பதற்கான கருவி

ஒரு பிளாஸ்டிக் பந்தினை எடுத்து (3 அல்லது 4 இஞ்ச் ) அதில் சிறு துளையிட்டு மணல் நிரப்பவும். ஒன்று அல்லது இரண்டு இஞ்ச் அளவுள்ள கண்ணாடித் துண்டில் கறுப்பு நிறக் காகிதம் ஒட்டி மறைக்கவும். அதன் பின்னர் 50 காசு சுற்றளவில் வட்ட வடிவமாக வெட்டி எடுக்கவும். இந்த கண்ணாடியைப் பேக்கிங் டேப் பயன்படுத்தி பந்தில் ஒட்டவும். இவ்வமைப்பினை ஒரு டம்ளரில் வைத்து தேவையான அளவில் சரிவினை ஏற்படுத்தி சுவரிலோ வெண்திரையிலோ சூரிய ஒளியை விழச்செய்து சூரியனை சுக்கிரன் கடந்து செல்வதைக் காணலாம்.

ஸ்டெல்லாரியம் மென்பொருளைப் பயன்படுத்தியும் சுக்கிரன் கடந்து செல்வதைக் காணலாம்.

இதற்கான வழிமுறை:

Application-> Science-> Stellarium
Date & time 6/6/2012, 6மணியாக மாற்றவும்.
உங்கள் இடத்தை தேர்வு செய்யவும்.
Search window வில் Sun என்று தட்டச்சு செய்க.
Zoom செய்யவும். Play speed யை அதிகரிக்கவும்.

No comments:

Post a Comment