30.12.12

கீயை அழுத்தினால் ஜ தட்டச்சு ஆகவில்லையா?


கீபோர்டில் ஜ என்ற எழுத்திற்கான கீயை அழுத்தினால் ஜ தட்டச்சு ஆகவில்லையா?


நமது கேரள கல்வித்துறை it@school -உடன் இணைந்து வெளியிட்டுள்ள உபுண்டுவில் தமிழில் தட்டச்சு செய்யும்போது ஜ என்ற எழுத்திற்குப் பதிலாக p தட்டச்சு ஆவதை பார்க்கலாம். இந்த பிரச்சினையை நிவர்த்திசெய்ய டவுண்லோட்சில் தரப்பட்டுள்ள rectification file யை டவுண்லோட் செய்தபின்னர் right click செய்து extract here என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் போல்டரை ஓப்பண் செய்து அதனுள் உள்ள os_update_patch கோப்பினை கிளிக் செய்யும்போது கிடைப்பதில் Run in terminal கிளிக் செய்து root பாஸ்வேர்ட் தந்து என்டர் செய்யவும். அதன் பின்னர் terminal குளோஸ் செய்து கணினியை ரீஸ்டார்ட் செய்யவும். இப்போது ஜ என்ற எழுத்து p தட்டச்சு செய்யும்போது கிடைக்கும்.

No comments:

Post a Comment