22.1.12

மின்னோட்டத்தின் விளைவுகள்

தேர்விற்கு மிகக்குறுகிய நாள்களே உள்ளன. மாணவர்கள் மீள்பார்வை ஆரம்பித்திருப்பார்கள். மீள்பார்வையின் போது உதவும் சிறு குறிப்பாக பாடப்பகுதி கிடைத்தால் மிக பயனுள்ளதாக அமையும். அத்தகைய ஒரு சிறு குறிப்பு மின்னோட்டத்தின் விளைவுகள் என்ற பாடப்பகுதிக்கு இங்கே தரப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை comment சில் எழதுமாறு வேண்டுகிறேன்.

இயற்பியல்
5. மின்னோட்டத்தின் விளைவுகள்

இப்பாடப்பகுதியிலுள்ள வினாக்களுக்கு விடையளிப்பதற்கு மாணவர்களுக்கு பயனளிக்கும் சில குறிப்புகள்.

மின்னாற்றலின் வேதிப்பயன்கள்

* அயனிகளின் இயக்கம் மின்பகுபொருட்களில் சுதந்திர அயனிகளின் இயக்கம்  
  மூலமாக மின்னோட்டம் ஏற்படுகிறது.
* உலோக கடத்தல் (கடத்திகளில் இயக்கம் ) சுதந்திர எலக்ட்ரான்களின் இயக்கத்
  தினால் மின்னோட்டம் ஏற்படுகிறது.
* காப்பர் சல்பேட் கரைசல் (மின்பகுபொருள் ) CuSo4+H2O


CuSO4 ®Cu+ + SO4-

H2O ® H+ + OH-

* நேர்மின்வாயை நோக்கி (+Ve) – எதிர்மின்னேற்ற அயனி
* எதிர்மின்வாயை நோக்கி (-Ve) – நேர்மின்னேற்ற அயனி

மின்முலாம் பூசுதல்

* நேர்மின்வாய் (+Ve) – உலோகம்
* எதிர்மின்வாய் (-Ve) – வளையல்/ஸ்பூண்/குவளை/மோதிரம் (பூசவேண்டிய பொருள் )

மின்பகுபொருள்

* வெள்ளி பூச – சில்வர் நைட்ரேட் கரைசல் அல்லது சோடியம் சயனைடினுடையவும்
  சில்வர் சயனைடினுடையவும் கரைசல்.
* தங்கம் பூச - சோடியம் சயனைடினுடையவும் கோல்டு சயனைடினுடையவும்
  கரைசல்.
* குரோமியம் பூச – குரோமிக் அமிலம்

மின்முலாம் பூசுதலின் விதி – m = நிலை எண் (மாறிலி) X Q
                           Q – மின்னேற்றம்,     m – நிறை

மின்னோட்டத்தின் வெப்ப பயன்

* ஓம் விதி – V = IR
[ V - மின்னழுத்த வேறுபாடு, I - மின்னோட்டம், R - மின்தடை, t - நேரம் ]
* ஜூல் விதி – H = I2Rt  ( or ) H = I(IR) t
                                                                =  IVt                      (  V = IR )
* நிக்ரோம் – சூடேற்றும் கம்பிசுருள் (Heating coil) – உயர்ந்த உருகுநிலை, உயர்ந்த
  மின்தடை, செஞ்சூடடைந்து அதிக நேரம் நிற்பதற்கானத் திறன்.
* மின்திறன்
* P = H/t  = I2R = IV,  மின்திறனின் அலகு – வாட் ( W )
* பாதுகாப்பு மின் உருகு இழை – லெட்டும் டின்னும் சேர்ந்த உலோக் கலவை –
  குறைந்த உருகுநிலை.

மின்னோட்டத்தின் ஒளிப்பயன்

* வெப்பத்தால் ஒளிரும் விளக்கு – மின்னிழை டங்ஸ்டன் – உயர்ந்த மின்தடை எண்
  உயர்ந்த உருகுநிலை, மெல்லிய கம்பியாக்க இயலுதல், வெப்பமடைந்து வெள்ளை 
  நிறமாக அதிக நேரம் நிற்பதற்கான திறன்.
* மின்னிறக்க விளக்குகள் – மின்வாய்களின் வாயிலாக மின்னிறக்கம் ஏற்பட்டு ஒளி
  தோன்றுகிறது.

* வாயுவும் நிறமும்

நிரப்பிய வாயு
தோன்றும் நிறம்
நியாண்
நைட்ரஜன்
குளோரின்
சோடியம்
பாதரசம்
நீலம்
ஆரஞ்சு
சிவப்பு
பச்சை
மஞ்சள்
வெள்ளை
ஹைட்ரஜன்

* ஒளிரும் விளக்குகள் (Tube light, C.F.L) தோரியம் ஆக்சைடு பூசிய மின்னிழை –
  பாதரசம் பூசிய கண்ணாடிக் குழாய் – எலக்ட்ரான் பாதரச அணுக்களுடன் மோதி புற
  ஊதாக்கதிர்கள் தோன்றும் – ஒளிரும் பொருள் புற ஊதாவை உட்கிரகித்து பார்வை
  ஒளியை வெளிவிடும் – வெப்ப விளக்குகளை விட 5 மடங்கு அதிக ஆயுள், நிழல்
  தோன்றுவதில்லை, அதிக ஒளி.

* LED – குறைவான மின்னோட்டத்தைப் பயன்படுத்தி ஒளி தரும் – பல நிறங்களில்
  கிடைக்கிறது – வெள்ளை நிறமுடையவை தெருவிளக்கு, வீட்டில், வாகன முகப்பு
  விளக்காகப் பயன்படுகிறது.   

இதன் தரவிறக்கம் இங்கே (Click for download) CHAPTER 5

   
 

No comments:

Post a Comment