7.10.11

வேதியியல் நோபல் பரிசு (Chemistry Nobel Prize)



 "குவாசிகிரிஸ்டல்' எனப்படும் படிகம் போன்ற வேதியியில் கட்டமைப்பைக் கண்டுபிடித்த இஸ்ரேலிய விஞ்ஞானி டேனியல் ஷெட்மனுக்கு இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேலில் 1941-ம் ஆண்டு பிறந்த ஷெட்மன், ஹைஃபா நகரிலுள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி (இயந்திரப் பொறியியல்) பட்டம் பெற்றார். அதன் பிறகு எம்.எஸ்சி., பி.எச்டி, ஆகிய படிப்புகளையும் முடித்தார். ஹைஃபா பல்கலைக்கழகத்திலேயே இப்போதும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் அரசின் இயற்பியலுக்கான உயரிய விருது ஷெட்மனுக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment