அரசு/அரசு
உதவி பெறும் பள்ளிகளில்
படிக்கும்/படித்து
சென்ற மாணவர்களின் முகவரி,
பெற்றோர்களின்
தகவல்கள், தொலைபேசி
எண்கள் போன்றவை தகவல் அறியும்
உரிமை சட்டம் 2005
இன் படி
மனு அளித்து பெற்றுக்கொண்ட
பின்னர் அவற்றை தவறான முறைகளில்
பயன்படுத்தி மாணவர்களையும்
பெற்றோர்களையும் தொந்தரவு
செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாக
தகவலறியும் உரிமை சட்டக்கமிஷன்
அறிவித்துள்ளது.
இத்தகைய
தகவல்கள் இல்லாது முறைகேடாகப்
பயன்படுத்த இயலாத தகவல்களை
மட்டும் அளித்தால் போதும்
என்று தகவலறியும் உரிமை
சட்டக்கமிஷன் செயலாளர்
தெரிவித்துள்ளார்.
பள்ளி
சேர்க்கையின் போது பெற்றோர்கள்
அளிக்கும் முகவரி,
தொலைபேசி
எண்கள் போன்ற தகவல்களை
தகவலறியும் உரிமை சட்டம்
செக்ஷன் 8(1) ல்
குறிப்பிட்டுள்ள நம்பிக்கைக்கு
உரியது ஆகையாலும் செக்ஷன்
-11 ல்
குறிப்பிட்டுள்ள மூன்றாவது
நபரை சார்ந்த தகவல்கள் என்பதாலும்
அவை பொதுவாக கேட்பவருக்கு
தர இயலும் தகவல்கள் அல்ல.
இத்தகைய
தகவலறியும் உரிமை சட்டக்கமிஷனின்
ஒரு உத்தரவிற்கு உயர்நீதிமன்றம்
ஒப்புதல் அளித்துள்ளது என்று
சட்டக்கமிஷன் செயலாளர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment