15.9.11


எழுத்தாளரைக் குறித்து ....
எழுத எழுதத் தீராத சொற்களாய் நீளும் வாழ்வின் துயரத்தையும் மகிழ்வையும் கொண்டாடுகிற பிரியத்தின் சுவைமிக்க கவிதைப் பயணத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர் க.அம்சப்பிரியா அவர்கள். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பரிசுகளை இருமுறையும், சிவகாசி பாரதி இலக்கிய சங்கத்தின் சி.கனகசபாபதி நினைவுப்பரிசு, செல்வன் கார்கி நினைவுப்பரிசு ஆகியவற்றையும் பெற்றுள்ளார். புன்னகை கவிதை இதழின் ஆசிரியர். வாகீஸ்வரி வித்யாமந்திர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.
ஆசிரியரின் தொடர்பயணத்தில் ict4tamil.blogspot.com –ம் இணைகிறது. ஆசிரியரின் பணி சிறக்க வாழ்த்துகிறது ict4tamil

ஆசிரியரின் அனுமதியுடன்...

பறத்தலை விரும்பும் பறவைகள்

அண்மையில் மாணவர்களுக்கான பயிற்சி முகாம்கள் சிலவற்றில் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு அமைந்திருந்தது. மாணவர்களின் எதிர்பார்ப்புகள் சில ஆச்சரியமூட்டும்படியாகவும், அவசிய மானதாகவும் இருந்தன. பெற்றோர்களிடமிருந்து அவர்களின் எதிர்பார்ப்புகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்....!
பெற்றோர்களைக் குழந்தைகள் பெற்றோர்கள் என்கிற அளவில் மட்டுமே எதிர்பார்ப்பதில்லை. சிறந்த தோழமையுணர்வுடனும் வழிகாட்டி யாகவுமே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடர்ந்து படி... படி... யென்று இயந்திரத்தனமாகச் சொற்களை உதிர்ப்பதை வெறுப்புடனேயே எதிர்கொள் கிறார்கள். இதன் விளைவு எதிர்த்திசைப் பயணமாகவே அமைந்துவிடு கிறது. கல்வியின் மீது கடும் வெறுப்பை விதைக்கப் பெற்றோர்களே முதன்மைக் காரணமாக அமைந்து விடுகின்றனர்.

குழந்தைகள் கல்வி கற்க ஆர்வமாக அமர்ந்தாலும் மாலை நேரங்களில் இடைவிடாது தொலைக்காட்சித் தொடர்களில் பெற்றோர்கள் மூழ்கிவிடுகின்றனர். சற்று வெளியே திண்ணையிலோ, தனி அறையிலோ அமர்ந்து குழந்தைகளைப் படிக்கக் கூறிவிட்டு பெற்றோர்கள் தொலைக்காட்சித் தொடர்களில் ஆழ்ந்துவிடுவதில் குழந்தைகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தாங்கள் மட்டும் ஏன் படிக்க வேண்டும்... ? ஏன் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது? என்று யோசிக்கத் தொடங்குகின்றனர்.
பெற்றோர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிற போது அது குழந்தைகளையும் ஈர்க்கிறது. அந்த ஈர்ப்பு தடை செய்யப்படுகிறபோது வன்முறை வேர்விடத் துவங்குகிறது. தங்கள் குழந்தைகளுக்குத் தேவைப்பட்டதை, தேவைப்பட்ட நேரத்தில் வாங்கிக் கொடுத்தால் மட்டும் போதாது. அது மட்டுமே நல்ல குழந்தை வளர்ப்பென்று பலரும் எண்ணியிருக்கிறார்கள். ஒரு குழந்தைக்குப் பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள் என்பதை முதலில் உணர வேண்டியது பெற்றோர்களே...!  

                                                    .....தொடரும்


No comments:

Post a Comment