28.1.14

இயற்பியல் மீள்பார்வை -2



  1. X,Y என்ற மின்வாய்களில் நேர்மின்வாய், எதிர்மின்வாய் எவை எனக் கண்டறிந்து எழுதுக.
  2. இங்கு பயன்படுத்தியிருக்கும் மின்பகுபொருள் எது? அதன் நிறம் என்ன?
  3. மின்னோட்டம் அளிக்கும்போது கடத்தியின் வழியாக செல்லும் அயனிகள் எவை? மின்பகுபொருள் வழியாகச் செல்லும் அயனிகள் எவை?
  4. சிறிது நேரத்திற்கு பின்பு மின்வாய்களிலும், மின்பகுபொருளிலும் தோன்றும் மாற்றத்தை உற்றுநோக்கி எழுதுக.
  5. இந்த மாற்றங்கள் நிகழ்வதற்கானக் காரணங்கள் என்ன?
  6. இந்த அமைப்பில் தேவையான மாறுதல்கள் செய்து ஸ்டீல் கப்பில் காப்பர் பூசுவதற்கான அமைப்பின் படம் வரைக.
  7. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றிலும் பயன்படுத்தவேண்டிய மின்பகுபொருள், நேர்மின்வாய், எதிர்மின்வாய் இவற்றை அட்டவணைப்படுத்துக.

      a) காப்பர் வளையலில் தங்கம் பூசுவதற்கு.
      b) ஸ்டீல் ஸ்பூணில் வெள்ளி பூசுவதற்கு.
      c) இரும்பாணியில் குரோமியம் பூசுவதற்கு.

  8. மின்முலாம் பூசுவதின் வேகத்தை அதிகரிக்க ஒரு வழிமுறை கூறு.
  9. மின்முலாம் பூசும்போது மின்னூட்டத்தை 5 மடங்காக அதிகரித்தால் எதிர்மின்வாயில் சேமிக்கப்படும் உலோகத்தின் நிறைக்கு என்ன மாற்றம் ஏற்படும். இதனைக் கண்டறிவதற்குப் பயன்படுத்திய சமன்பாடினை எழுதுக.
  10. மின்முலாம் பூசுவதற்கு AC மின்னோட்டத்தைப் பயன்படுத்தலாமா? ஏன்?

No comments:

Post a Comment