26.1.14

இயற்பியல் மீள்பார்வை -1


"ஒரு கடத்தியுடன் தொடர்புடைய காந்த ஃபிளக்சில் (காந்த புலத்தில்) மாற்றம் ஏற்பட்டால் அந்த கடத்தியில் மின்னோட்டம் தூண்டப்படுகிறது''

  1. இந்த நிகழ்வு எந்த பெயரில் அறியப்படுகிறது?
  2. ஒரு கம்பிச்சுருளும் (வரிச்சுற்றும்), காந்தவும் பயன்படுத்தி இந் நிகழ்வினை ஒரு சோதனையின் வாயிலாக விளக்கும்போது கம்பிச்சுருளில் மின்னோட்டம் தோன்றுகிறதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு எந்த கருவியைப் பயன்படுத்துவது பொருத்தமானது?
  3. கடத்தியுடன் தொடர்புடைய காந்த ஃபிளக்சை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்ய (வேறுபடுத்த) எந்தெந்த முறைகளைப் பயன்படுத்தலாம்?
  4. வரிச்சுற்றில் தோன்றும் மின்னோட்டத்தின் (emf) அளவை எவ்வாறு அதிகரிக்கலாம்?
  5. இந்தச் சோதனையில் வரிச்சுற்றின் வழியாகச் செல்லும் மின்னோட்டத்தின் திசை மாறுகிறது என்று கண்டறியப்பட்டது. இம்மின்னோட்டம் எந்த வகையைச் சார்ந்தது? இவ்வகையில் மின்னோட்டத்தின் திசை மாறக் காரணம் என்ன?

  6. இச்சோதனைக்காக பயன்படுத்திய மின்சுற்றின் படம் வரைக.
  7. இச்சோதனையில் நடைபெறும் ஆற்றல் மாற்றம் எது?
  8. இந்த தத்துவத்தைப் பயன்படுத்தி மின்னோட்டம் உற்பத்தி செய்யும் கருவி எது?
  9. AC மின்னியற்றி, DC மின்னியற்றி அமைப்பிலுள்ள முக்கியமான வேறுபாடினை எழுதுக?
  10. AC மின்னியற்றி, DC மின்னியற்றி, மின்கலம் இவற்றிலிருந்து கிடைக்கும் மின்னோட்டத்தின் வரைபடம் வரைந்து அவற்றை ஒப்பீடு செய்க.
  11. அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு கருவிக்கும் பொருத்தமானவற்றை அவற்றிற்கு நேராக எழுதுக.
    (டயஃப்ரம், வெட்டுவளையம், குரல்சுருள், புலக்காந்தம், நழுவு வளையம், ஆர்மெச்சர்).
    a) AC மின்னியற்றி b) DC மின்னியற்றி c) அசையும் சுருள் மைக்ரோபோண்.
  12. ''AC மின்னியற்றி, DC மின்னியற்றி, அசையும் சுருள் மைக்ரோபோண் இவை மின்காந்த தூண்டல் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் கருவிகளாகும்.” இக் கூற்றினை நியாயப்படுத்துக.

No comments:

Post a Comment