7.2.13

முக்கிய கூற்றுகள் இயற்பியல் 10 -ம் வகுப்பு Part 2

    1. தொலைவிலுள்ள பொருள்களின் போட்டோ எடுப்பதற்கும், தொலைவிலிருந்து கொண்டே கருவிகளைக் கட்டுப்படுத்தவும் அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுத்தப் படுகிறது.
    2. பார்வை ஒளியிலுள்ள ஊதா நிறத்துடன் சேர்ந்து காணப்படும் கண்ணுக்கு புலப்படாத கதிர்களாகும் புறஊதா.
    3. புறஊதாக் கதிர்கள் போட்டோ பிலிமிலுள்ள சில்வர் புரோமைடில் வேதிமாற்றத்தை தோற்றுவிக்கும்.
    4. மிதமான தீவிரம் கொண்ட புறஊதாக் கதிர்கள் நமது உடலில் வைட்டமின் D யை தோற்றுவிக்கிறது.
    5. புறஊதா கதிர்கள் அளவுக்கு அதிகமாக நமது உடலில் விழுவது தோல் புற்றுநோய்க் குக் காரணமாகிறது.
    6. புறஊதாக் கதிர்களின் அலைநீளம் பார்வை ஒளியை விடக்குறைவாகும்.
    7. அலைநீளம் குறைவானக் கதிர்களை உட்கிரகித்து அலைநீளம் அதிகம் கொண்ட பார்வை ஒளியாக மாற்றும் பொருள்கள் ஒளிரும் பொருள்கள்.
    8. சிவப்பு நிறத்திற்கு அலைநீளம் அதிகம்.
    9. சிவப்பு நிறம் குறைவாக சிதறலடையும்.
    10. சோடியம் ஆவி விளக்கிலிருந்து வெளிவரும் ஒளியின் நிறம் மஞ்சள்.

    11. காகிதம் மின்காப்புப் பொருளாக பயன்படுத்தியுள்ள மின்தேக்கிகளுக்கு காகித மின்தேக்கி (paper capacitor) என்ற பெயர்.
    12. மின்காப்பிற்குப் பதிலாக மின்பகுபொருள் பயன்படுத்தும் மின்தேக்கிகள் எலக்ட்ரோலிட்டிக் மின்தேக்கிகள்.
    13. ஜெர்மானியவும் சிலிக்கனும் குறைகடத்திகளுக்கு எடுத்துக்காட்டுகள்.
    14. எலக்ட்ரோலிட்டிக் மின்தேக்கிகளை அவற்றின் துருவத்திற்கேற்ப மின்சுற்றில் இணைக்க வேண்டும்.
    15. டயோடினை மின்னோட்டம் கடந்து செல்லும் வகையில் மின்சுற்றில் இணைப்பதை முன்னோக்குச் சார்பு என்பர்.
    16. பின்னோக்குச் சார்பில் டயோடு மின்சாரத்தை கடத்தாது.
    17. AC யை DC ஆக மாற்றும் செயல் திருத்துதல்(ரெக்டிபிகேஷன்) எனப்படும்.
    18. மின்னோட்ட துடிப்புகளின் ஆற்றலை அதிகப்படுத்துவது பெருக்கம் அடையச்செய்தல்.
    19. பெருக்கம் அடைந்த துடிப்புகளின் வீச்சு (amplitude) அதிகரிக்கிறது.
    20. சந்திரன் பூமியைச் சுற்றிவர சுமார் 27 நாட்கள் வேண்டும்.
    21. ஒரு நாளில் சந்திரன் அதன் பாதையில் 13 1/3 டிகிரி விலகியிருக்கும்.
    22. சந்திரன் அதனுடைய பாதையில் 27 – ல் ஒரு பகுதி சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவே ஒரு நாள்.
    23. மொத்த நாள்கள் 27.
    24. ஸ்ரீ சித்திரை திருநாள் அரசன் பிறந்தபோது சந்திரன் சித்திரை விண்மீனின் அருகே இருந்தது.
    25. பூமியின் சுழற்சியின் காரணமாக சூரியன் கிழக்கே தோன்றி மேற்கே மறைவதாக தோன்றுகிறது.
    26. விண்மீன்களை வைத்துப்பார்க்கும் போது சூரியன் 1 டிகிரி கிழக்கு நோக்கி அகன்று போவதுபோல் தோன்றுகிறது.
    27. சூரியன் விண்மீன்களிடையே போவதுபோல் தோன்றுகின்ற சூரியனின் பாதை ராசி சக்கரம் எனப்படும்.
    28. ராசி சக்கரம் 12 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
    29. சூரியன் எந்த ராசியில் நிற்பது போல் தோன்றுகிறதோ அந்த ராசியின் பெயரே அப்போதைய மலையாள மாதத்தின் பெயர்.
    30. நேரத்தைக் கணக்கிட பண்டைக்காலங்களில் கோள்களின் இயக்கத்தைப் பயன்படுத்தினர்.
    31. ஒரு நாளுடன் சூரியன் காணப்படுவதுபோல் தோன்றுகின்ற கால அளவு சூரியக் காலம் (ஞாற்று வேளை)
    32. ஒரு சூரியக் காலத்தின் அளவு சுமார் 13 – 14 நாள்கள்.
    33. திருவாதிரை சூரியக்காலம் மிதுன மாதத்திலாகும்.
    34. அஸ்வதி சூரியக்காலம் மேஷ மாதத்திலாகும்.
    35. நமக்கு பார்க்க முடியும் சூரியனின் வெளிப்பகுதி போட்டோஸ்பியர்.
    36. ஹைட்ரஜன் இணைவதால் சூரியனில் ஆற்றல் தோன்றுகிறது.
    37. ஒளிரும் பகுதிக்கு வெளியேயுள்ள குரோமோஸ்பியரும் அதற்கு வெளியேயுள்ள
    38. கொரோனாவும் சேர்ந்தது சூரியனின் வளிமண்டலம்.
    39. போட்டோஸ்பியரில் வெப்பம் குறைவான பகுதிகள் கறுத்த புள்ளிகளாகத் தெரிகிறது. இவை சூரியப் புள்ளிகள் ஆகும்.
    40. சூரிய மேற்பரப்பிலிருந்து வெளிப்பகுதிக்கு ஹைட்ரஜனுடையவும் ஹீலியத்தினுடையவும் உட்கருக்களின் ஒழுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவே சூரியக்காற்று.
    41. சூரியனின் வேற்பரப்பில் சில நேரங்களில் தீ சுவாலைகள் உயர்ந்து வட்ட வடிவத்தில் பின்னோக்கி வருவதும் உண்டு. இதுவே சூரிய மேடுகள்.
    42. சிவப்பு - ஆரஞ்சு - மஞ்சள் - வெள்ளை - நீலம் (ROY WB) என வெப்பம் அதிகரிப்பதற்கு ஏற்ப விண்மீன்களின் நிறம் காணப்படுகிறது.
    43. வாயு மேகங்களே விண்மீன்களின் பிறப்பிடம். இது நெபுலா என்ற பெயரில் அறியப்படுகிறது.
    44. சூரியனை ஒத்த விண்மீன்கள் நெபுலா - சுருங்கும் விண்மீன் - விண்மீன் - சிவப்பு அரக்கன் - வெள்ளைக்குள்ளன் - கருப்புக்குள்ளன் என மாற்றமடைகிறது.
    45. கண்டறியப்பட்ட எல்லா வெள்ளைக்குள்ளர்களின் நிறையும் சூரியனின் நிறையில் 1.44 யை விடக் குறைவாக உள்ளது என சுப்பிரமணிய சந்திரசேகர் கண்டறிந்தார். இதுவே சந்திரசேகர் எல்லை.
    46. சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தூரம் ஒரு அஸ்ட்ராணமிக்கல் அலகு (1 A.U)
    47. ஒரு ஒளிவருடம் = 9.46 x 1012 கிலோமீட்டர்.
    48. முதன்முதலில் விண்ணிற்கு செலுத்திய செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1.
    49. பூமத்தியரேகைக்கு மேலாக ஒரு சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றி வருபவை நிலநடுக்கோட்டு செயற்கைக்கோள்கள். (புவிநிலை செயற்கை கோள்கள்)
    50. பூமியின் வட தென் துருவங்களுக்கிடையே 200 கிலோமீட்டர் முதல் 1000 கிலோ மீட்டர் உயரத்திலுள்ள சுற்றுப்பாதையில் பூமியை சுற்றுபவை துருவ செயற்கை கோள்கள். (polar satellites)

      No comments:

      Post a Comment