16.3.14

PHYSICS MODEL QUESTION PAPER 2014


Model Question Paper 2014
Time: 1 ½ hrs Physics Score: 40


1. மின்முலாம் பூசுதல் மின்னோட்டத்தின் எந்த பலனுடன் தொடர்புடையது? 1
2. தொடர்பினைக் கண்டறிந்து பொருத்தமாக நிரப்புக.
    நிலக்கரி வாயு : நிலக்கரி
    டீசல் : …........                                                                                      1
3. படத்தில் தரப்பட்டுள்ள குறியீடு மின்சுற்றில் எதனைக் குறிப்பிடும்.      1



4. சிவப்பு நிறத்தின் நிரப்பு நிறம் எது?                                                      1
5. தரப்பட்டுள்ள கூற்று தவறானது எனில் திருத்தி எழுதுக.
"தொலைதூரங்களுக்கு மின்னோட்டத்தை அனுப்பும் போது உயர்ந்த மின்னழுத் தத்திலும் உயர்ந்த மின்னோட்டத் தீவிரத்திலும் அனுப்பப்படுகிறது. (High voltage and high current).”                                                                                             1
6. A -க்கு பொருத்தமானதை B யிலிருந்தும் C யிலிருந்தும் கண்டறிந்து A-க்கு நேராக
எழுதுக.                                                                                                 4

A              B               C
1. மின்மாற்றி
2. CFL
3. SONAR
4. மின்தூண்டி
  • புறஊதாக் கதிர்கள்
  • மீயொலி
  • பரிமாற்று மின்தூண்டல்
  • தன்தூண்டல்
  • ஒளிர்தல்
  • மின்சார வினியோகம்
  • ஹென்றி
  • கடலின் ஆழம்
7. ஒரு முப்பட்டகத்தின் வழியாக மஜந்தா நிறம் கடந்து செல்வதன் படம் தரப்பட்டுள்ளது.
படத்தை முழுமையாக்குக.                                                                      2
               

8. நமது அண்டவெளிக்கு அருகே உள்ள வேறொரு அண்டமாகும் ஆண்ரோமிடா.
a) அண்டம் (Galaxies) என்றால் என்ன?                                               1
b) ஆண்ரோமிடாவிற்கான தூரத்தை அளப்பதற்குப் பொருத்தமான அலகு எது?
                                                                                                 1
9. ஒரே அதிர்வெண் கொண்ட இரண்டு இசைக்கவைகளில் ஒன்றின் தடிமன் குறைவு,
இரண்டாவதின் தடிமன் அதிகம்.
a) இவை ஒவ்வொன்றையும் சம அளவு ஆற்றல் பயன்படுத்தி அதிர்வடையச்
செய்தால் தோன்றுகின்ற ஒலியானது அவற்றின் எந்தப் பண்பில் மாறுபட்டிருக்கும்.                                                                                  1
b) இவற்றைப் பயன்படுத்தி பீட்டுகள் தோற்றுவிப்பதற்கான சூழ்நிலையில் ஏதனும்
ஒன்றினை எழுதுக.                                                                                1
10. மின்சுற்றுப் படத்தை பார்க்கவும்.
                   
a) சுவிட்ச் S ஆண் செய்யும்போது D1, D2 என்ற LED -களில் எது ஒளிரும்? 1
b) மின்கலத்திற்குப் பதிலாக 3V AC தரப்பட்டால் நீங்கள் உற்றுநோக்குவது என்ன?  1          11. மின்சுற்றுப் படத்தை பார்க்கவும்.
        

a) சுவிட்ச் S ஆண் செய்யும்போது R1, R2 மின்தடைகள் ஒவ்வொன்றிலும்
நடைபெறும் ஆற்றல் மாற்றம் என்ன?                                                     1
b) R1, R2 என்ற மின்தடைகளில் 5நிமிட நேரத்தில் தோற்றுவிக்கப்படும் ஆற்றலைக் காண்க.                                                                                                 2
12. வெவ்வேறு அதிர்வெண்களில் ஒலியைத் தோற்றுவிக்கும் கருவியிலுள்ள ஒலி, அதன்
அருகே இருக்கும் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தை அதிர்வடையச் செய்வதைக் காண
முடிந்தது. ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணிலுள்ள ஒலி தோன்றிய போது கண்ணாடிப்
பாத்திரம் அதிக அளவு அதிர்வடைந்து உடைந்தது.
a) எந் அதிர்வெண்ணிலுள்ள ஒலியிலும் கண்ணாடிப் பாத்திரமும் அதிர்வடையக் காரணமான நிகழ்வு எது?                                                                       1
b) ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணிலுள்ள ஒலி தோன்றிய போது கண்ணாடிப்
பாத்திரம் உடைந்ததற்கானக் காரணம் என்ன?                                           2
13. வானின் நீல நிறத்திற்கும் உதயசூரியனின் சிவப்பு நிறத்திற்கும் காரணமானது ஒரே
நிகழ்வு.
a) இந்நிகழ்வின் பெயர் என்ன?                                                              1
b) இந்நிகழ்வின் அடிப்படையில் வானின் நீல நிறமும் உதயசூரியனின் சிவப்பு நிறமும் தோன்றுவதற்கானக் காரணத்தை எழுதுக.                                                   2
14. விண்மீன்களின் பிறப்பைக் குறிப்பிடும் ஒழுகு படத்தினை (flow diagram)
உற்றுநோக்கவும்
                 

a) விடுபட்டவற்றை நிரப்புக.                                                                   2
b) தற்போது சூரியன் இதில் எந் நிலையில் உள்ளது?                                  1
15. ஹைட்ரஜனின் கலோரிமதிப்பு 150000 KJ/Kg ஆகும்.
a) 3Kg ஹைட்ரஜன் முழுவதையும் எரிவதற்கு அனுமதித்தால் தோற்றுவிக்கப்படும் ஆற்றல் எவ்வளவு?                                                                                            1
b) ஒரு எரிபொருள் என்ற வகையில் ஹைட்ரஜனின் மேன்மைகள் என்ன?    2
16. ஒரு மின்மாற்றியின் முதன்மை சுருளில் தடிமன் குறைந்த காப்பிடப்பட்ட
கம்பிகளினால் ஆன ஏராளம் சுற்றுகளும், துணைச்சுருளில் தடிமன் அதிகமான
கம்பியினால் கொஞ்சம் சுற்றுகள் உள்ளதாக கண்டறியப்பட்டது.
a) இது எந்த வகை மின்மாற்றி?                                                                1
b) துணைச்சுருளில் தடிமன் அதிகமான கம்பி பயன்படுத்தக் காரணம் என்ன? 1
c) இதனுடைய முதன்மைச்சுருளில் 240V -ம், துணைச்சுருளில் 60V -ம்
முதன்மைசுருளில் 1A மின்னோட்டத் தீவிரமும் உள்ளது எனில் துணைச்சுருளின்
மின்னோட்டத் தீவவிரம் என்ன?                                                                2
17.A “மின் உற்பத்தி நிலையங்களிலுள்ள திறன் மின்னியற்றிகளில் (Power generator) ஆர்மச்செர் நிலையானது (ஸ்டேட்டர்). "
a) மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வது எத்தனை
வோல்டில்?                                                                                              1
b) ஸ்டேட்டர் என்பதிலிரந்து நீ புரிந்துகொண்டது என்ன?                             1
c) இத்தகைய மின்னியற்றிகளில் ஆர்மச்செர் ஸ்டேட்டராக அமைக்கக்
காரணமென்ன? 2
OR

B ராணியின் வீட்டில் மின்னோட்ப் பயன்பாடினை மீட்டரிலிருந்து எடுத்தபோது 60
நாட்களின் பயன்பாடு 126 யூனிட்.
a) பயன்படுத்தும் மின்சாரத்தினை அளப்பதற்கான அலகு என்ன?                  1
b) ராணியின் வீட்டில் 60W லுள்ள5 மின்னிழை பல்புகள் 7 மணி நேரத்திற்கு
தினமும் வேலை செய்கிறது. இதற்குப் பதிலாக 12W ள்ள 5 CFL விளக்குகளோ,
5W திறன் கொண்ட LED விளக்குகளோ பயன்படுத்தினால் பயன்படுத்தும்
மின்சாரத்தின் அளவு பெருமளவு குறையும் என்று ராணி புரிந்துகொண்டாள்.
CFL பயன்படுத்தினால் 60 நாட்களுக்கு எத்தனை யூனிட் லாபம் கிடைக்கும்?
LED விளக்குகள் பயன்படுத்தினால் இது எந்த அளவில் அமையும்?               3


இதனுடைய பிடிஎப் இங்கே டவுண்லோட் செய்யவும்

விடை இங்கே டவுண்லோட் 



No comments:

Post a Comment